Posts

பங்காரு அடிகள் மறைவு: வெறுப்பு மனநோய் கும்பலை அடையாளம் காண்க...

Image
 பங்காரு அடிகள் மறைவு: வெறுப்பு மனநோய் கும்பலை அடையாளம் காண்க... ----------- ஒருவரது சாதி, இனம், மதம் என்கிற அடையாளங்களை வைத்து அவர் மீது வெறுப்பை உமிழ்வது வெட்கக் கேடானது. அது ஒரு மனநோய். இன அழிப்பு நோக்கத்தின் தொடக்கம் இந்த வெறுப்புதான். “சாதிவெறுப்பு கும்பல்” பிராமணர் அல்லாத வகுப்பில் பிறந்து, அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தகர்க்கும் வழிபாட்டு முறையை அருட்திரு பங்காரு அடிகள் உருவாக்கினார் என்பதற்காகவே – ஒரு கும்பல் அவரை இழிவாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறது. காலம் காலமாக திணிக்கப்பட்ட வைதீக கட்டுப்பாடுகளை அவர் தகர்த்து எறிந்ததை அந்தக் கும்பலால் இன்னமும் சகிக்க முடியவில்லை. கூடவே, தமிழிலேயே வழிபாட்டை நடத்தினார்; கணவனை இழந்தோர், மாதவிடாய் காலம், சாதி வேறுபாடு என எந்த ஒதுக்குதலும் இல்லாத வழிபாட்டை எல்லோருக்கும் சாத்தியமாக்கினார்; மாற்று மதங்களுக்கு கூட மதிப்பளித்தார் என்பதெல்லாம் அந்தக் கும்பலுக்கு எரிகிறது. “இன வெறுப்பு கும்பல்” ‘பங்காரு’ என்கிற பெயர், ‘நாயக்கர்’ எனும் சமுதாயப் பட்டம் – இவற்றை வைத்தே, அவரை தெலுங்கர் என்பதாகக் கருதிக்கொண்டு சில ‘தமிழ்த் தேசிய வியாதிகள்’ அவர்மீது வெறுப்ப

சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு: பாமக சார்பில் 26ஆம் தேதி கருத்தரங்கம்!

Image
 சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு: பாமக சார்பில் 26ஆம் தேதி கருத்தரங்கம்! இந்தியாவில் சமூகநீதியைக் காக்கவும், நிலைநிறுத்தவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், விழிப்புணர்வும் அனைத்து மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளது. ஆனால், சமூகநீதியின் மண் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் மக்களிடம், குறிப்பாக தமிழக அரசுக்கு இதுகுறித்த விழிப்புணர்வும், அக்கறையும் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படாதது கவலையளிக்கிறது. இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் மறக்க முடியாத நாள்கள் பல உண்டு. அந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் நாள் அக்டோபர் 2-ஆம் நாள் ஆகும். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அந்த நாளில் தான் பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள்  வெளியிடப்பட்டன. பிகார் அரசின் இந்த சமூகநீதி நடவடிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவும் வரவேற்று உள்ளன. சமூகநீதிக்கான இந்த நடவடிக்கையை வரவேற்காதவை மத்திய அரசும் தமிழக அரசும் தான். பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் ஒவ்வொரு சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநிலை உள்ளிட்ட

சாதிவாரி கணக்கெடுப்பு- மவுனம் கலைப்பாரா முதல்வர்

Image
 சாதிவாரி கணக்கெடுப்பு: சாதித்துக் காட்டிய பிகார் அரசு - சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு? இந்தியாவிலேயே முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன், அதன் விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது பிகார் மாநில அரசு. இதன்மூலம் சமூகநீதியைக் காப்பதில் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமையை பிகார் அரசு வென்றெடுத்திருக்கிறது. இதற்குக் காரணமான பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் அவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதியைக் காக்கும் விஷயத்தில் தமிழ்நாட்டிற்கும், பிகாருக்கும் இடையே எப்போதும் மறைமுகமான போட்டி நடந்து கொண்டே தான் இருக்கிறது. மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட  ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை, 1951ஆம் ஆண்டில் மக்கள் போராட்டத்தின் மூலம் சாத்தியமாக்கியது தமிழ்நாடு என்றால், தேசிய அளவில் ஓபிசி இட ஒதுக்கீட்டை  கொண்டு வருவதற்கான மண்டல் ஆணையம் அமைக்கப்படுவதை 1978-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் பிக